
கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
அண்மையில் இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவின் அழைப்புக்கிணங்கவே அவர் அங்கு செல்லவிருப்பதாக அக்கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத் மௌலானா தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் சந்திரகாந்தனின் இந்திய விஜயத்தின் போது இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங், மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி ஆகியோரையும் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாக அவர் தெரிவித்தள்ளார்