
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜயசூரியவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக இணைப்பாளர் ஒருவர் எமக்குத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,\"பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 18 பேர் இதுவரையில் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.எனினும், தற்போது இந்த பாதுகாப்பு நான்கு பேர் வரையில் குறைக்கப்பட்டுள்ளதாக\" சுட்டிக்காட்டினார்.
அத்துடன் பாதுகாப்புக்காக வழங்கப்பட இரு வாகனங்களையும் மீள வழங்குமாறு அரசு உத்தரவிட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.