உங்கள் ஈ-மெயிலை இணைக்க
கட்டுரைகள்

அஞ்சலி : பொதுவுடைமைக் கட்சியாளர், கவிஞர் எரிக் ஸ்ரினுஸ் - கரவைதாசன்

[14-Nov-2009]

 

 

 

டென்மார்க் பொதுவுடைமைக் கட்சியாளர் கவிஞர் எரிக் ஸ்ரினுஸ் காலமானார். உலக இடதுசாரியச் சிந்தனையாளர், டென்மார்க்கின் சிறந்த கவிஞர்களில் ஒருவர், சிறுகதை எழுத்தாளர், நாவலாசிரியர், கட்டுரையாளர், முதலாளித்துவ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி, மனித உரிமையாளர், மூன்றாம் உலக நாடுகளின் நண்பன் எனப் பன்முகங்களை கொண்ட கவிஞர் எரிக் ஸ்ரினுஸ் தனது 75வது வயதில் காலமாகிவிட்டார்.

நீண்ட நாட்களாகவே கொடிய புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த தோழர் எரிக் ஸ்ரினுஸ் அவர்கள் (13.11.09) வெள்ளிக்கிழமை காலமானார். சிறந்த மொழி வல்லாளர் என டெனிஸ் இலக்கிய உலகில் இவர் பேசப்பட்டபோதிலும் தனது படைப்புகளினூடே தான் ஒரு கலகக்காரன் என்பதை இறக்கும் தருவாய்வரை அடையாளப்படுத்தியே வந்துள்ளார். ”இலக்கியம் படைப்பது என்பது தனிப்பட்டவர்களின் இயங்கு சக்தி. எப்படி படைக்க வேண்டும், எதை எழுத வேண்டும் என்பதெல்லாம் எழுத்தாளனின் தனிப்பட்ட உரிமை. வேண்டுமானால் படைப்பின் உருவத்தைப்பற்றியும் அதன் மொழி பற்றியும் யாரும் விமர்சனம் வைக்கட்டும் அதன் உள்ளடக்கம் பாட்டாளிய இயக்கத்திற்கு உதவிபுரிவதாக இருக்க வேண்டும்” என மாக்சிம் காக்கியிடம் லெனின் கேட்டுக் கொண்ட வார்த்தைகளை தோழர் எரிக் ஸ்ரினுஸ் அவர்கள் ஒரு வரமாகவே கொண்டு எழுதி வந்தார். அதனால்தான் டென்மார்க்கின் மிகப் பெரிய மாக்சியரும் எழுத்தாளருமாகிய மார்டின் அனசன் நெக்சுய் அவர்களின் அறக்கட்டளைப் பரிசினை தனது படைப்பொன்றிற்காக 1986ல் இவர் பெற்றுக்கொண்டார்.

இதற்கு முன்பும் அனைத்துக்குமான கலகக்காரன் பரிசை 1979 லும் தவிர இரண்டு தடவைகள் எழுத்தாளர்கள் சங்கத்தின் அமைதிக்கான பரிசினை, (1992, 2005) லும் துருக்கி நாட்டினைச் சேர்ந்த கவிஞர் நாசிம் கைக்மெற் பரிசினை 2009 லும் வேறும் சில உலக தரம் வாய்ந்த பரிசுககைளையும் தனது படைப்புகளுக்காக மொத்தம் எட்டுத் தடவைகள் பெற்றுள்ளார். 1934ம் ஆண்டு 22ந்திகதி ஆகஸ்ட் மாதம் பிறந்த தோழர் எரிக் ஸ்ரினுஸ் அவர்கள் 1953ல் தனது உயர்தர கல்வியை முடித்துக்கொண்டு வர்த்தகக் கப்பல் ஒன்றில் மாலுமியாக வேலையில் சேர்ந்து பயணித்த வேளை மேற்கு வங்காளத்தில் தான் கண்ட வறுமைக்கூடாக உலகின் ஏற்றத் தாழ்வினை கண்டு கொண்டதாக பிரசங்கித்தார். கூடவே உலகமாற்றத்தினை வேண்டி 1954ல் டென்மார்க் கம்யூனிச வாலிபர் சங்கத்தில் சேர்ந்து இயங்கத்தொடங்கினார். 1956ல் பயிற்றப்பட்ட ஆசிரியராக தேர்ச்சியடைந்த எரிக் அவர்கள், கொலன்ட், இந்திய மொழிகளிலும் தேர்ச்சியுள்ளவர். இவரது முதலாவது கவிதைத் தொகுதி ”எல்லைக்கிராமம்” (1958) அறிவித்தல், சமூகஜனநாயகக்காரன், கம்யூனிச இதழ், சோசலிசவாரஇதழ், தினசரி தொழிலாளி என பல்வேறுபட்ட இடதுசாரிப் பத்திரிகைகளில் எழுதியுள்ளார்.

டென்மார்க் கொம்யூனிஸ்ட் கட்சி, உலக மனித உரிமைச் சங்கம், அணு ஆயுதத்திற்கு எதிரான இயக்கம், டெனிஸ் வியட்நாம் சங்கம், ஐரோப்பிய யூனியனுக்கெதிரான மக்கள் இயக்கம், தென்ஆபிரிக்க கமிட்டி, பலஸ்தீன் நட்புறவுச்சங்கம், எனப் பல மனித உரிமை அமைப்புகளிலும் பொதுவுடைமைக் கட்சியிலும் அங்கம் வகித்துள்ளார்.

கடந்த ஆண்டில் இவரது 50வது இலக்கிய வாழ்வை யொட்டி இவரது தோழர்களினால் தோழமை கொண்டும் விமர்சித்தும் 400 பக்கங்களைக் கொண்ட மலரொன்று வெளியிடப்பட்டுள்ளது. இம் மலரின் பக்கங்களை விரித்தால் தோழர் எரிக் ஸ்ரினுஸ் அவர்களின் பொதுவுடைமை வாழ்வினையும் அவரது முற்போக்கு படைப்புகள் பற்றிய விபரங்களையும் அவரது மனித நேயத் தடங்களையும் தரிசிக்கலாம்.

-கரவைதாசன்-


 

0கருத்துக்கள்
Related Post
Post your Comments
English   பாமினி உச்சரிப்பு
Name :
Email :
Comment :
எழுத்தாளர்கள்
தேடல்                           வகைகள்
செய்திகள்

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்கள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

ஐ.ம.சு.கூ. ஆதரவாளர் சுட்டுக் கொலை : குருநாகலில் சம்பவம்

2ஆவது இராணுவ நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் குழு ஜனாதிபதியினால் நியமனம்

காத்தான்குடியில் முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரின் வாகனம் தீக்கிரை

பிரிட்டன் அரசியல் கட்சிகள் பட்டியலிலிருந்து விடுதலைப் புலிகள் மக்கள் கட்சி நீக்கம்

சனல் 4 வீடியோ காட்சிகளை வெளியிட்டவர்கள் தொடர்பில் விசாரணை

தபால்மூல வாக்களிப்பு இன்றுடன் முடிவு

சி.பி.ஐ. பட்டியலிலிருந்து பிரபாகரனின் பெயர் நீக்கம்

கோப்பாயில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு

தேடல்